/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 பேரிடம் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
/
5 பேரிடம் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 24, 2024 01:56 AM
ஈரோடு, ஈரோடு பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட, 12.50 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு, சித்தோடு, 4 ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் சரவணன் தலைமையிலானவர்கள் வாகன தணிக்கை செய்தனர். கேரளா மாநிலம் பாலக்காடு ,முகமது ஆஜிஸ் என்பவரது காரை சோதனையிட்டனர்.
பிளாஸ்டிக் வியாபாரியான அவர், பிளாஸ்டிக் பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக எடுத்து சென்ற, நான்கு லட்சத்து, 80,940 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு சி.என்.கல்லுாரி அருகே, காரில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூர், சிட்டியூரை சேர்ந்த நேதாஜியிடம், 63,800 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
எலவமலை, பெரியார் நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரி சசிகுமார் தலைமையிலானவர்கள், பைக்கில் வந்த பவானி, மேட்டுநாசுவம்பாளையத்தை சேர்ந்த தறிப்பட்டறை உரிமையாளர் சரவணனிடம், இரண்டு லட்சத்து, 76,290 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில், காரில் நடத்திய சோதனையில், அதே பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் மணிகண்டனிடம், 3 லட்சத்து, 71,740 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
கருங்கல்பாளையம் சோதனை சாவடியில், காரில் வந்த சேர்வேந்தர் என்பவரிடம், 65,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று ஐந்து நபர்களிடம், 12 லட்சத்து, 57,770 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
நேற்று முன்தினம் காலை வரை மாவட்ட அளவில், 1 கோடியே, 52 லட்சத்து, 66,385 ரூபாயை பறிமுதல் செய்து, ஆவணங்களை தாக்கல் செய்ததால், 77 லட்சத்து, 18,535 ரூபாயை விடுவித்தனர்.

