டிராகன் பழ சாகுபடிக்கு ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கீடு
டிராகன் பழ சாகுபடிக்கு ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : நவ 05, 2026 06:25 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், புதிதாக உயர் மதிப்பு டிராகன் பழச்செடி சாகுபடி செய்ய, 1.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே
உள்ள டிராகன் பழத்தோட்டங்களுக்கு நிரந்தர பந்தல் அமைக்க
ெஹக்டேருக்கு, மூன்று லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்க அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் விவசாயி களுக்கு பயிற்சி,
தொழில் நுட்ப வழிகாட்டுதல் வழங்கப்பட்டு, டிராகன் பழ சாகுபடியை
ஊக்கப்படுத்தி வருகிறது.
கான்கிரீட் துாண்கள்
ஈரோடு மாவட்டம்
அந்தியூர், கோபி, சத்தியமங்கலம் பகுதியில் இப்பயிர் அதிகமாக
சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த, 18 முதல், 24 மாதங்களில்
செடிகள் காய்க்க துவங்கும். முறையாக பராமரித்தால், 15 முதல், 20
ஆண்டுகள் வரை விளைச்சல் தரக்கூடும். செடிகளுக்கு கான்கிரீட் துாண்கள்
உள்ளிட்ட வலுவான தாங்கு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஒரு துாணை சுற்றி,
3 அல்லது, 4 செடிகள் நடலாம்.
சத்துள்ள பழம்
இரண்டாவது ஆண்டில்
இருந்து ஏக்கருக்கு, 4 முதல், 6 டன் வரையும், முழுமையாக வளர்ந்த
தோட்டங்களில், 8 முதல், 12 டன் வரை விளைச்சல் கிடைக்கக்கூடும்.
ஏக்கருக்கு, 2 லட்சம் முதல், 4 லட்சம் ரூபாய் வரை ஆரம்ப செலவு
ஏற்படலாம். சந்தை விலையை பொறுத்து, முதிர்ந்த தோட்டத்தில் ஆண்டுக்கு,
4 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். டிராகன்
பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின்-சி, இரும்பு, மக்னீசியம்,
ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளன. தமிழகம், கர்நாடகா, மஹராஷ்டிரா,
குஜராத் மாநிலங்களில் சாகுபடியாகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு,
1.62 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. மானியம் பெற விரும்பும்
விவசாயிகள், உரிய ஆவணங்களுடன் அந்தந்த பகுதி தோட்டக்கலை துறை
அலுவலகத்தை அணுகலாம்.
