ADDED : நவ 05, 2026 06:26 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் உள்ள, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள்,
பணியாளர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்
வரும் 17, 18 ஆகிய இரு நாட்கள் காலை, 10:00 முதல் மாலை, 5:45 மணி வரை நடக்க
உள்ளது.
ஈரோடு கலெக்டர் அலுவலகம், இரண்டாம் தள கூட்ட அரங்கில்
நிகழ்வு நடக்கிறது. தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர், கலெக்டர்,
டி.ஆர்.ஓ., தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர். ஆட்சி மொழி வரலாறு,
சட்டம், அலுவலக குறிப்பு, வரைவு, செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சி
மொழி செயலாக்கம், அரசாணை, மொழி பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சி
வழங்கப்படும்.
ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தும் அலுவலர் நிலையில்
அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் ஒருவர், பணியாளர் நிலையில்
உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர் ஒருவர் என தலா
இருவர் பங்கேற்க வேண்டும்.
