/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரூ.3.33 லட்சம், மதுபானம் பறிமுதல்
/
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரூ.3.33 லட்சம், மதுபானம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரூ.3.33 லட்சம், மதுபானம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரூ.3.33 லட்சம், மதுபானம் பறிமுதல்
ADDED : ஜன 16, 2025 07:25 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பறக்கும் படை அதிகாரிகள், ஆறு பேரிடம் இருந்து பறிமுதல் செய்த ரொக்கப்பணம், மதுபானம் போன்றவற்றில் ஆவணங்களை காண்பித்து ரொக்கத்தை வாங்கி சென்றது தவிர, 3.33 லட்சம் மதிப்பில் ரொக்கப்பணம், மதுபானங்கள் உள்ளன.
கடந்த, 7ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை பறக்கும் படையினரால், ஐந்து லட்சத்து, 52 ஆயிரத்து, 860 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சண்முகம், 1.80 லட்சம் ரூபாய், முஸ்தபா, ஒரு லட்சம் ரூபாய் உள்பட ஐந்து பேருக்கு, மூன்று லட்சத்து, 30 ஆயிரத்து, 860 ரூபாய் உரிய ஆவணங்களின் அடிப்படையில் திரும்ப வழங்கி விட்டனர். மீதமுள்ள நபருக்கான தொகை, 2.20 லட்சம் ரூபாய், கருவூலத்தில் செலுத்தி வைத்துள்ளனர். மேலும், 9,556 ரூபாய் மதிப்பில், 14.22 லிட்டர் மதுபானம், 1,500 மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்துள்ளனர். மொத்தம், இரண்டு லட்சத்து, 33 ஆயிரத்து, 56 ரூபாய் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்த தபஸ் மந்தல் என்பவர் குடும்பத்துடன், ஈரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் காரில் வந்தார். அவரது காரை தணிக்கை செய்தபோது, ஆவணங்கள் இன்றி, ஒரு லட்சம் ரூபாய் இருந்ததால், அத்தொகையை பறிமுதல் செய்து, கருவூலத்தில் செலுத்தினர்.
*தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சந்தனா தீப்தி நியமிக்கப்பட்டுள்ளார்.