/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.47 கோடி, பொருட்கள் மாவட்ட அளவில் பறிமுதல்
/
ரூ.4.47 கோடி, பொருட்கள் மாவட்ட அளவில் பறிமுதல்
ADDED : ஏப் 08, 2024 07:25 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர், ௨௪ மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி, சம்பத் நகரில் நேற்று நீலகண்டனிடம், 1.19 லட்சம் ரூபாய்; ஈரோடு மேற்கு தொகுதியில் அப்பாத்தா கோவில் அருகே பழனிவேலிடம், 5.43 லட்சம் ரூபாய்; வில்லரசம்பட்டி நால் ரோட்டில், 32,000 ரூபாய் மதிப்பில், 640 துண்டுகள்; பெருந்துறை தொகுதியில் குன்னத்துார் சாலையில் மணிகண்டனிடம், 51,730 ரூபாய் பறிமுதல் செய்தனர். அந்தியூர் தொகுதி, குருநாத சுவாமி கோவில் அருகே பிரசாத்திடம், 62,100 ரூபாய்; மூலக்கடை அருகே பாலுவிடம், 1.16 லட்சம் ரூபாய் உட்பட, 6.31 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
நேற்று வரை மாவட்ட அளவில் பணம் மற்றும் பொருட்களாக, 4.47 கோடி ரூபாய் மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர். இதில் மூன்று கோடியே, 32 லட்சத்து, 54,813 ரூபாய் ரொக்கம். உரிய ஆவணங்களை சமர்பித்து, இரண்டு கோடியே, 21 லட்சத்து, 57,955 ரூபாயை விடுவித்தனர். ஒரு கோடியே, 10 லட்சத்து, 96,858 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் உள்ளது.

