/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் குழுக்களுக்கு ரூ.674 கோடி கடனுதவி
/
மகளிர் குழுக்களுக்கு ரூ.674 கோடி கடனுதவி
ADDED : நவ 04, 2024 04:52 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 14,775 மகளிர் சுய உதவிக்குழுக்களில், 1,64,420 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில், 2023-24ல் ஊரக பகுதிகளில், 338 குழுக்களுக்கு ஆதார நிதியாக, 50.70 லட்சம் ரூபாய்; நகர்புற பகுதிகளில், 601 குழுக்களுக்கு, 60.10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் ஊரக பகுதி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக, 1.50 லட்சம் வீதம், 136 குழுக்களுக்கு, 2.04 கோடி; வங்கி கடனுதவியாக ஊரக பகுதிகளில், 6,751 குழுக்களுக்கு, ரூ.399.17 கோடி; நகர்ப-குதிகளில், 4,109 குழுக்களுக்கு, ரூ.272.55 கோடி என, நடப்-பாண்டில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம், 11,935 குழுக்க-ளுக்கு, 674.86 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.