sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'பிறவி தேச பக்தர்கள் உள்ள இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,'

/

'பிறவி தேச பக்தர்கள் உள்ள இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,'

'பிறவி தேச பக்தர்கள் உள்ள இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,'

'பிறவி தேச பக்தர்கள் உள்ள இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.,'


ADDED : ஜன 26, 2026 04:29 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தேசிய சிந்தனை பேரவை சார்பில், வந்தே மாதரம் பாடலின், 150வது ஆண்டு விழா சிறப்பு கருத்தரங்கு, ஈரோட்டில் நேற்று மாலை நடந்தது. தேசிய எழுச்சியில் வந்தே மாதரம் என்ற தலைப்பில் பா.ஜ., மாநில பொது செயலாளர் ராம.சீனிவாசன் பேசியதாவது:

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளில் தேசிய சிந்-தனை தேவைப்படவில்லை. ஆனால் நம் நாட்டில் தேவைப்படு-கிறது. இங்கு தேசியம் நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. தேசி-யத்தை ஊட்ட வேண்டும். அதற்கான தேவை குறையவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இம்மண்ணை கடவுளாக நினைப்பது தான் தேசியம். இம்மண் ஆன்மிகத்தின் அடிப்படையில் உருவா-னது. ஆன்மிகம் தர்மத்தின் அடிப்படையிலானது. சட்டத்தின் அடிப்படையிலானது அல்ல. வந்தே மாதரம் என்றாலே சில-ருக்கு வயிறு எரிகிறது. வந்தே மாதரம் என்பது ஆங்கிலேயர் ஆட்சியில் தான் தடை செய்யப்பட்ட வார்த்தை. ஆனால் இந்த பாடலுக்கு தற்போதும் தடை செய்கிறார்கள் என்றால் இவர்கள் யார்? பிறவி தேச பக்-தர்கள் உள்ள இயக்கம் ஆர்.எஸ்.எஸ்., ஆகும். கருப்பு, சிவப்பு, காவி சட்டைகாரர்கள் அல்ல. காவி சட்டைக்காரர்கள் தான் விடுத-லைக்கு வித்திட்டவர்கள். தமிழன் தேசியவாதி. வந்தே மாதரம் பாடலை பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி அனைவரும் ஒன்று கூடும் இடங்களில் எல்லாம் பாட வேண்டும். வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் தான் இருந்தது. அதை தமிழ்படுத்தி-யவர் சுப்பிரமணிய பாரதி. வங்க மக்களை சுதந்திர போராட்டத்-துக்கு தயார்படுத்த இப்பாடல் உருவானது. ஆனால் இந்திய அளவில் இப்பாடலை பிரபலமடைய செய்தவர் பாரதி.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us