/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேட்டியில் தீப்பிடித்து கோவில் பூசாரி பலி
/
வேட்டியில் தீப்பிடித்து கோவில் பூசாரி பலி
ADDED : ஜன 26, 2026 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: குண்டடம், விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 62; கோவில் பூசாரி. நேற்று அதிகாலை, 3:30 மணியளவில் வீட்டில் விறகு அடுப்பில் தண்ணீர் காய வைக்க, மண்ணெண்ணெய் ஊற்-றியுள்ளார். அடுப்பை பற்ற வைத்தபோது, வேட்டியில் தீப்பிடித்து பரவியது.
வெப்பம் தாங்காமல் அலறிய செல்வராஜை உறவி-னர்கள் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்-றனர். மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். குண்-டடம் போலீசார் விசாரிக்கின்றனர். விறகின் மீது மண்-ணெண்ணெய் ஊற்றியபோது வேட்டியிலும் சிறிது பட்டுள்ளது. இதுவே விபத்துக்கு காரணமாகி விட்டதாக தெரிகிறது.

