ADDED : நவ 25, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலில், ருத்ராஷ்டமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக விழா சிறப்பு யாகம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் தொடங்கியது.
இதன் பிறகு கணபதி வழிபாடு, 108 கலச பூஜை, தங்க கவசம் அணிவித்தல் மற்றும் பூர்ணாகுதி நடந்தது. பிறகு அபிஷேகம், அலங்கார பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. இதில் கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.