/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இந்து இயக்க தலைவர்கள் மீது அடக்குமுறை என குமுறல்
/
இந்து இயக்க தலைவர்கள் மீது அடக்குமுறை என குமுறல்
ADDED : மார் 11, 2025 06:48 AM
பவானி; பவானி அருகே தளவாய்பேட்டையில், இந்து பாதுகாப்பு படை மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இந்து பாதுகாப்பு படை மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதி இந்து அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையை சேர்ந்த இந்துக்கள், தமிழர்கள் இந்தியாவில் பல இடங்களில் முகாம்களில், பல ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்தியாவிலேயே தங்க குடியுரிமை வழங்க வேண்டும் என்கிற ஒரு முக்கியமான தீர்மானத்தை இன்று நிறைவேற்ற இருக்கிறோம். தமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்க தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, மிரட்டுவது, ஆபத்தை ஏற்படுத்தும் சூழல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த அடக்கு முறையை, அரசு கைவிட வேண்டும். இந்து மக்கள் கட்சி தொழிற்சங்க தலைவர், 40 நாட்களாக சிறையில் இருக்கிறார். முகநுால் பதிவில் முதல்வரை இழிவுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஜாமினுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மன்னிப்பு கேட்டால்தான் ஜாமின் என்பது விசித்திரமாக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.