/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் போராட்டம்
/
ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர் போராட்டம்
ADDED : ஜன 09, 2026 05:05 AM
ஈரோடு: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர் நலச்சங்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்-பாட்டம் செய்தனர்.
வட்டார இயக்க மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். சமுதாய ஒருங்கிணைப்பாளர் கவுரி முன்-னிலை வகித்தார். கடந்த, 2012 முதல் ஒப்பந்த அடிப்படையில், 12,000 முதல், 14,000 ரூபாய் ஊதியத்தில் பணி செய்கிறோம். ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஊதிய பிடித்தம் செய்தல், வட்டார இயக்க மேலாளர்களை வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக தரம் குறைத்தல், பணியாளர்களை பணியில் இருந்து விடுவித்தல் போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
அரசின் பிற துறையின் கீழ் உள்ள திட்டப்பணிகளை வழங்-கினால், அதற்கான கூடுதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பெருந்துறை சாலையில் ஊர்வலமாக சென்று, குமலன்குட்டையில் உள்ள பூமாலை வணிக வளா-கத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

