/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்
/
சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்கம்
ADDED : மார் 03, 2025 07:31 AM
சென்னிமலை: திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முக பயிற்சி மையம் சார்பில், சைவ சித்தாந்த பயிற்சிமூன்றாவது பயிற்சி முகாம் தொடக்க விழா சென்னிமலையில் நேற்று நடந்தது. பூந்துறை மடத்தில் நடந்த விழாவுக்கு புலவர் தண்டபாணி முன்னிலை வகித்தார்.
திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு ஆசிரியர் பரணிதரன், பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். இரண்டு ஆண்டுகள், 24 வகுப்புகளாக, பிரதி ஆங்கில மாதம் தோறும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வகுப்பு நடக்கும். இதில் சேர வயது வரம்பில்லை. தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்தால் போதும். விவரங்களுக்கு சென்னிமலை பயிற்சி மைய அமைப்பாளர் மகேஷை, 97912 41956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.