/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் சொசைட்டியில் பாக்கு விற்பனை துவக்கம்
/
அந்தியூர் சொசைட்டியில் பாக்கு விற்பனை துவக்கம்
ADDED : ஆக 09, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, பவானி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், அந்தியூர் கிளை சார்பில் கடந்த, 7ல் பாக்கு ஏல விற்பனை துவங்கியது. விவசாயிகள் நலன் கருதி, வேளாண் விளை பொருளான பாக்கு ஏலத்தில் உரிய விலை கிடைக்கும் வகையில், அந்தியூரில் துவங்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்றனர். மேலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வாழை ஏலமும், புதன் கிழமை அன்று பாக்கு ஏலமும், வியாழக்கிழமை அன்று நெல், நிலக்கடலை, தேங்காய் ஏலமும் நடத்தப்படும் என, விற்பனை சங்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.