/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.53 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை
/
ரூ.53 லட்சத்துக்கு தே.பருப்பு விற்பனை
ADDED : நவ 14, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, வெள்ள கோவில், சின்னதாராபுரம், வாணியம்பாடி, திருச்சி, கரூர், காங்கேயம், திருப்பத்துார்,
அம்மன்கோவில் பகுதி விவசாயிகள், 48 ஆயிரம் கிலோ தேங்காய் பருப்பை கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ அதிகபட்சம், 138 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 77 ரூபாய்க்கும் விலை போனது. மொத்தம், 53 லட்சத்து,
36 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.