/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.85 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.3.85 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : நவ 28, 2024 06:50 AM
ஈரோடு: மொடக்குறிச்சி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.3.85 லட்-சத்துக்கு விளை பொருட்கள்
விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்-பனை கூடத்துக்கு, 20 ஆயிரத்து, 535
தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 36.80 முதல், 51.69
ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 6,271 கிலோ எடை கொண்ட தேங்காய், இரண்டு லட்சத்து, 70
ஆயி-ரத்து, 654 ரூபாய்க்கு விற்பனையானது. கொப்பரை தேங்காய், 39 மூட்டை வரத்தாகி முதல் தரம் ஒரு
கிலோ, 121.60 முதல், 139.18 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 83.90 முதல், 115.10 ரூபாய்
வரையிலும் விற்பனையானது. மொத்தம், 1,028 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், ஒரு லட்சத்து, 14
ஆயிரத்து, 794 ரூபாய்க்கு விலை போனது.தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, மூன்று லட்-சத்து, 85 ஆயிரத்து, 448 ரூபாய்க்கு
விற்பனையானது.