/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருள் விற்பனை துவக்கம்
/
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருள் விற்பனை துவக்கம்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருள் விற்பனை துவக்கம்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பூஜை பொருள் விற்பனை துவக்கம்
ADDED : ஆக 26, 2025 01:21 AM
ஈரோடு, விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி களிமண், கிழங்கு மாவால் தயாரிக்கப்பட்ட சிலைகள், ஈரோடு மாநகர வீதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நேற்று ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் பூஜை பொருட்களும் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது.
அதாவது சிலைக்கு மேல் வைக்கப்படும் பல வண்ண அலங்கார குடை வந்துள்ளது. ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் பூக்குடை, தட்டுக்குடை, பேப்பர் குடைகளும் உள்ளன. விநாயகர் திருமேனியை அழகுபடுத்தும் வண்ண நுால், வண்ண ஜிகினா தாள், பிளாஸ்டிக் பூ, டிசைன் காகிதமும் வந்துள்ளது.
இதேபோல் பூஜைக்கு தேவைப்படும் வாழைத்தார் விற்பனை மார்க்கெட்டில் நேற்று களை கட்ட தொடங்கியது. பூவன் தார் ரூ.400 முதல் ரூ.500; தேன் வாழை தார் ரூ.400, கதலி ரூ.600 வரை விற்றது.
ஆப்பிள் உள்ளிட்ட பிற பழங்களின் விலை வெகுவாக குறைந்து இருப்பதால் பிற பழங்களை வாங்கி சென்றனர்.