/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சேலம், ஈரோடு சிறுமிகள் பலாத்காரம்: இருவருக்கு 10 ஆண்டு சிறை
/
சேலம், ஈரோடு சிறுமிகள் பலாத்காரம்: இருவருக்கு 10 ஆண்டு சிறை
சேலம், ஈரோடு சிறுமிகள் பலாத்காரம்: இருவருக்கு 10 ஆண்டு சிறை
சேலம், ஈரோடு சிறுமிகள் பலாத்காரம்: இருவருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : பிப் 28, 2025 07:00 AM

ஈரோடு: ஈரோடு, பெரிய செட்டிபாளையம் கணபதி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 46; காய்கறி கடை வைத்துள்ளார். இவர், ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை காட்டி 2020 ஜூன் 21ல், மாருதி ஆம்னி வேனில் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமாகாமல் இருக்க, மருந்து கடையில் மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார்.
சிறுமி மாயமானது குறித்து, அவரது தாய் ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். 2020 ஜூன் 23ல், சிறுமியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாலுகா போலீசார் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. காய்கறி வியாபாரி மீது கடத்தல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் நேற்று, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி சுவர்ணகுமார் வழக்கை விசாரித்து, காய்கறி வியாபாரி கோவிந்தராஜூக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சேலம் சிறுமி
சேலம், அன்னதானப்பட்டி, உத்தரப்பன்காட்டை சேர்ந்தவர் ராஜகணேஷ், 24. இவர், 2020 ஆக., 7ல், 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து டவுன் மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜ கணேைஷ கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் ராஜகணேஷூக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று நீதிபதி உத்தரவிட்டார்.