ADDED : அக் 11, 2024 01:14 AM
ஆயுதபூஜை பொருள் விற்பனை அமோகம்
ஈரோடு, அக். 11-
நாடு முழுவதும் ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் ஆயுதபூஜைக்கு தேவையான பொரி, பூக்கள், பூசணி, வாழைக்கன்று, வாழைப்பழம், காய்கனிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை ஈரோடு மாநகர், மாவட்டத்தில் நேற்று அமோகமாக நடந்தது.
இந்த பொருட்களை விற்பனை செய்யும் ஆர்.கே.வி.சாலை, வ.உ.சி., காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட், கொங்கலம்மன் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பெரியமாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம், வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி, மூலப்பாளையம், கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், காவேரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரம் களை கட்டியது. மக்களும் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது. இப்பகுதிகளில் பல இடங்களில் தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டு, வியாபாரம் கன ஜோராக நடந்தது. மாநகரில் பல அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், நேற்று பூஜை போடப்
பட்டது.
மார்க்கெட்டில் பூ விலை உயர்வு
ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி, சத்தி மார்க்கெட்டில், பூக்களின் விலை நேற்று கணிசமாக உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ, ௮௪௦ ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 1,120 ரூபாயாக உயர்ந்தது.
இதேபோல், 680க்கு விற்ற முல்லை, 760 ரூபாய்; கோழிக்கொண்டை-135; சம்பங்கி-350, அரளி-370, காக்கடா-800, செண்டுமல்லி-130, துளசி-60, செவ்வந்தி-300, ஜாதிமுல்லை-500 ரூபாய்க்கும் விற்றது.
தேங்காய், பூவன் விலை விர்ர்ர்
ஆயுதபூஜையால், புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தையில் நேற்று, வழக்கத்தை காட்டிலும் தேங்காய் விலை உயர்ந்தது. ஒரு தேங்காய், ௧௫ ரூபாய் முதல், 40 ரூபாய் வரை விலை போனது. இதுவே சில நாட்களுக்கு முன், ௧௦ ரூபாய் முதல், ௨௦ ரூபாயாக இருந்தது.
இதேபோல் சந்தையில் வாழைத்தார் விலையும் உயர்ந்தது. ஆயுதபூஜை, விஜயதசமியால், 1,000க்கும் மேற்பட்ட வாழைத்தார் நேற்று வரத்தானது. 18 கிலோ பூவன் ரக வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், 400 ரூபாயாக
உயர்ந்தது.