/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜவுளி சந்தையில் காட்டன் ரகங்கள் விற்பனை துவக்கம்
/
ஜவுளி சந்தையில் காட்டன் ரகங்கள் விற்பனை துவக்கம்
ADDED : பிப் 28, 2024 02:04 AM
ஈரோடு:ஈரோடு,
பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள கனி மார்க்கெட், அதை சுற்றி உள்ள
டி.வி.எஸ்., வீதி, மணிக்கூண்டு சாலை பகுதிகள், ஈஸ்வரன் கோவில்
வீதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளி சந்தை
நடந்தது.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: ஒரு மாதத்துக்கு
மேலாக வெயில் வாட்டி வரும் நிலையில், சந்தைக்கு மக்கள் வரத்து குறைந்து
காணப்படுகிறது. தற்போது பொதுவான பண்டிகைகள் இல்லை. அதேநேரம்
கோவில் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதால், அதை
சார்ந்தவாறு வேட்டி, லுங்கி, புடவை, துண்டு விற்பனை ஓரளவு நடந்து
வருகிறது.
அத்துடன் வெயிலுக்கு ஏற்ற நைட்டி, சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை இரவு உடை, உள்ளாடைகள் விற்பனையும் ஓரளவு
நடக்கிறது. ஆனால் மொத்த விற்பனை, பெட்ஷீட், பெட்ஸ்பிரட், ஆடம்பர,
ஆயத்த ஆடைகளின் விற்பனை மந்தமாகவே காணப்படுகிறது. காட்டன்
துணிகளின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை மட்டுமே ஓரளவு துவங்கி கை
கொடுக்கிறது. இவ்வாறு கூறினர்.

