/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சம்பங்கி பூ விலை கடும் சரிவு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை
/
சம்பங்கி பூ விலை கடும் சரிவு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை
சம்பங்கி பூ விலை கடும் சரிவு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை
சம்பங்கி பூ விலை கடும் சரிவு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை
ADDED : மே 30, 2024 12:59 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய் புளியம்பட்டி, பூ மார்க்கெட்டில் கோவில் திருவிழா சமயங்களில் ஒரு கிலோ சம்பங்கி பூ, 100 ரூபாய்க்கு விலை உயர்ந்து விற்பனையான நிலையில் தற்போது, 10 ரூபாயாக சரிந்துள்ளது.
புன்செய் புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மல்லி, முல்லை மற்றும் சம்பங்கி பூக்கள் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் பூக்கள், புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சித்திரை மாத கோவில் திருவிழா சமயங்களில் ஒரு கிலோ சம்பங்கி பூ, 100 ரூபாய்க்கு விலை உயர்ந்து விற்பனையான நிலையில் தற்போது பூ விலை சரிவடைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சம்பங்கி பூக்கள், 10 ரூபாயாக விலை குறைந்துள்ளது. ஜூன் மாத துவக்கத்தில் வளர்பிறை முகூர்த்தம் உள்ளதால், அப்போது சம்பங்கி பூ விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள்
தெரிவித்தனர்.