/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாமி சிலை கண் திறந்தது? ஈரோட்டில் திரண்ட மக்கள்
/
சாமி சிலை கண் திறந்தது? ஈரோட்டில் திரண்ட மக்கள்
ADDED : மார் 25, 2024 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
அருகே மூலப்பட்டறையை அடுத்த காந்திபுரம் மில் வீதியில், சங்கிலி
கருப்பராயன் கோவில் உள்ளது.
புனரமைக்கப்பட்ட கோவிலில் சில
நாட்களுக்கு முன், புதிய சிலை பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகம்
நடந்தது. கருப்பராயனை சுவாமியை, அப்பகுதி மக்கள் காவல் தெய்வமாக
வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கருப்பராயன் சிலை
வழக்கம் போல் இல்லாமல், கண் திறந்ததாக கூறி அப்பகுதி மக்கள்
திரண்டனர். பலர் பூஜை செய்து வழிபட்டனர்.

