/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விலை சரிவால் குளக்கரையில் கொட்டப்பட்ட சம்பங்கி பூ
/
விலை சரிவால் குளக்கரையில் கொட்டப்பட்ட சம்பங்கி பூ
ADDED : மே 20, 2025 01:59 AM
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பங்கி பூ பயிரிடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்வதால், விளைச்சல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு, 50 டன் பூ நேற்று வரத்தானது. நேற்று முன்தினம் கிலோ சம்பங்கி, 20 ரூபாய்க்கு விற்ற நிலையில், 10 ரூபாயாக நேற்று விலை சரிந்தது.
கடை மற்றும் வாசனை திரவிய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 10 டன் பூ மீதியானது. இதனால் பூ மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிச்சென்ற விவசாயிகள், வியாபாரிகள், பெரியகுளம் பகுதியில் குளக்கரையில் கொட்டி அழித்தனர்.