/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணை நீர்த்தேக்க பகுதியில் மணல் கடத்தல்
/
அணை நீர்த்தேக்க பகுதியில் மணல் கடத்தல்
ADDED : ஜூலை 07, 2024 02:46 AM
பு.புளியம்பட்டி:பவானிசாகர்
அணை நீர்த்தேக்கப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் அதிக அளவில்
மணல் படிந்துள்ளது. தற்போது அணை நீர்த்தேக்க பகுதியில் இருந்து
விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி
வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி டிப்பர் லாரிகள் மூலம், மணல் கடத்தல்
ஜோராக நடக்கிறது. டிப்பர் லாரிகளில் கடத்தப்படும் ஒரு யூனிட் மணல்,
20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அணை நீர்த்தேக்கத்தின்
தெற்கு பகுதி கோவை மாவட்டத்திலும், மறு பகுதி ஈரோடு மாவட்டத்திலும்
உள்ளது. இதை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி கொண்டு மணல் கடத்தலில்
ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பெத்திகுட்டை, சம்பரவள்ளி,
ரங்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று லாரி மற்றும்
டிராக்டர்களில் மணல் அள்ளப்படுகிறது.
மணல் கடத்தலில் ஈடுபடும்
கும்பலுக்கு, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பக்கபலமாக உள்ளனர். மணல்
திருட்டை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.