நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மணல் திருடியவர் கைது
பவானி, நவ. 6-
ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை ஆர்.ஐ., சாமுவேல்ராஜ் மற்றும் அலுவலர்கள், வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலத்தை அடுத்த செலம்பூரம்மன் கோவில் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் மணல் ஏற்றி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அந்தியூர், புதுமேட்டூரை சேர்ந்த சண்முகம், 60, என தெரிந்தது. விசாரணையில் உரிய ஆவணம் இல்லாதது தெரிந்தது. இதனால் டிராக்டரை பறிமுதல் செய்து, சண்முகம் மீது போலீசில் புகாரளித்தனர். அவரை கைது செய்த போலீசார், பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

