/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு
/
ரயில்வே ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு
ரயில்வே ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு
ரயில்வே ஸ்டேஷன் அருகில் கழிவுநீர் குட்டையால் சுகாதார சீர்கேடு
ADDED : மே 21, 2024 11:33 AM
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ரயில் நிலையம், ரயில் நிலைய வளாகம், சென்னிமலை ரோட்டில், நீண்ட காலமாக கழிவுநீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால், ரயில் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், பச்சை பசேலென காட்சியளிக்கும் கழிவுநீர் குட்டையில் ஆகாயத்தாமரை உட்பட பல செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. மழை காலங்களில் இந்த குட்டை நிரம்பி, சென்னிமலை ரோட்டில் கழிவு நீர் பெருக்கெடுத்தோடி, அப்பகுதி குடியிருப்பு, கடைகளில் புகுகிறது.
எனவே மாநகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து, கழிவு நீர் குட்டை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.