ADDED : ஏப் 18, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
தாராபுரம் : தாராபுரம் நகராட்சி துாய்மை பணியாளர்கள், சம்பளம் வழங்கப்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம் நகராட்சியில், 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும், 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். இந்த மாதம் நேற்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்தவர்கள், நேற்று வேலைக்கு போகாமல் பணிகளை புறக்கணித்தனர்.
பிறகு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பளம் வழங்குவதாக உறுதியளிக்கவே கலைந்து சென்றனர்.
