sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சத்தி, தாளவாடியில் தொடர் மழையால் அவதி

/

சத்தி, தாளவாடியில் தொடர் மழையால் அவதி

சத்தி, தாளவாடியில் தொடர் மழையால் அவதி

சத்தி, தாளவாடியில் தொடர் மழையால் அவதி


ADDED : டிச 03, 2024 07:19 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்,: சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதி-காலை முதலே

பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. பின் இடைவெளி விட்டு காலை, 8:00 மணி

முதல் சாரல் மழை-யாக மாறியது. இதனால் விவசாய பணிகள் மட்டுமின்றி, பள்ளி

செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தாளவாடிம-லையில் நேற்று

முன்தினம் இரவு முதலே பரவலாக மழை தொடர்ந்து பெய்தது. நேற்று காலையும்

மழை தொடர்ந்தது.* அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, 6:00 மணி முதல், 8:௦0

மணி வரை, மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பள்ளி, கல்லுாரி செல்வோர் மற்றும்

வேலைக்கு செல்ப-வர்கள் குடைபிடித்து சென்றனர். தொடர் மழையால் அந்தியூர் வாரச்சந்தை வளாகம் சேறு,

சகதியாக மாறியது. மக்கள் தடுமாறியபடி சென்று காய்கறி வாங்கினர்.* பெஞ்சல் புயலால், ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை

பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்ச-மாக சென்னிமலையில், 27 மி.மீ.,

மழை பதிவானது. பிற இடங்-களில் பதிவான மழை விபரம் (மி.மீ.,ல்): நம்பியூர்,ஈரோடு

தலா-9, மொடக்குறிச்சி, கொடுமுடி தலா-12, பெருந்துறை-20, கொடி-வேரி,பவானி தலா-

14, கவுந்தப்பாடி-7.60, அம்மாபேட்டை-10.20, வரட்டுபள்ளம் அணை-18, கோபி-16.20,

எலந்தகுட்டை மேடு-17.60, குண்டேரிபள்ளம்-6, சத்தி-11, பவானிசாகர்-17.20,

தாள-வாடி-6.40.* கோபி அருகே சிறுவலுார், பதிப்பாளையம், மீன்கிணறு உள்-ளிட்ட பகுதியில் நேற்று

மாலை, 5:00 மணிக்கு பலத்த மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையால்,

மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் கோபி, மொடச்சூர், நாதிபாளையம், பொலவக்காளி-பாளையம்,

வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம் உள்ளிட்ட பகுதியில், மாலையில் ஒரு

மணி நேரத்துக்கு மேலாக சாரல் மழை பெய்தது.* நம்பியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான வேமண்டம்பா-ளையம், கோசணம்,

மலையப்பாளையம், எலத்துார், குருமந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மதியம், 3:௦௦

மணிக்கு தொடங்கிய மழை இரவு வரை பரவலாக பெய்தது. அதேசமயம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனம-ழையால் குளம்,

குட்டைகள் நிரம்பி தரைப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.






      Dinamalar
      Follow us