தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பட்டியலினத்தவர் காலில் விழுந்த விவகாரம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

பட்டியலினத்தவர் காலில் விழுந்த விவகாரம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

பட்டியலினத்தவர் காலில் விழுந்த விவகாரம் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு


ADDED : அக் 11, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:பெருந்துறை தாலுகா மடத்துபாளையம் பெரும்பாளி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். பகுஜன் சமாஜ் கட்சி மேற்கு மண்டல மாநில ஒருங்கிணைப்பாளர். ஈரோடு எஸ்.பி., கிரண் ஸ்ருதியிடம், அளித்த மனு:

பெரும்பாளி கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர் வசிக்கின்றனர். அதே பகுதியில் உள்ள பொது மயானத்தை இவர்கள் பயன்படுத்த, மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராமத்தை சேர்ந்த முதியவர் சென்னி, 80, கடந்த, 5ல் உயிரிழந்தார். சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெருந்துறை போலீசார், வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, 'எந்த வேலைக்கும் எங்களிடம் வரக்கூடாது' என்று மாற்று சமூகத்தினர் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த பட்டியலினத்தை சேர்ந்த இருவர், போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில், மற்றொரு பிரிவை சேர்ந்த ரிதுபரண் காலில் விழுந்தபின், முதல் முறையாக மயானத்தில் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தில் மற்றொரு பிரிவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய, திங்களூர் போலீஸ் எஸ்.ஐ., செல்வராஜ், தனிப்பிரிவு போலீஸ் கைலாஷ், திங்களூர் நில வருவாய் ஆய்வாளர் அம்பிகா, மடத்துபாளையம் வி.ஏ.ஓ., நல்லசாமி, வி.ஏ.ஓ உதவியாளர் கவிதா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவகாரத்தில் சரியாக செயல்படாத ஆர்.டி.ஓ., முத்துசாமி, கோபி டி.எஸ்.பி., ஸ்ரீனிவாஸை இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us