/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி
/
பவானி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி
ADDED : மார் 11, 2025 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : புளியம்பட்டியை சேர்ந்த திலீப் மிஸ்டரி மகன் சுரேஷ், 14; ஒன்பதாம் வகுப்பு மாணவன். உடன் படிக்கும் நண்பர்களுடன் சத்தியை அடுத்த அரியப்பம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகில், பவானி ஆற்றில் குளிக்க நேற்று முன்தினம் வந்தான்.
ஆழமான பகுதிக்கு சென்ற சுரேஷ் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானான். சத்தி போலீசார் உடலை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.