ADDED : அக் 24, 2024 02:11 AM
அந்தியூர்:ஈரோடு மாவட்டம், பவானி தேவபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம், சாந்தி தம்பதிக்கு ஹரிணி, 13, என்ற மகளும், ஹரிஷ் தேவசேனாதிபதி, 11, என்ற மகனும் உள்ளனர். அந்தியூர் அருகே பருவாச்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், சாந்தி ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மகள் ஹரிணி, அதே பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இவருக்கு ஒரு வாரமாக, காய்ச்சல் இருந்தது. இந்நிலையில், நேற்று கணித பாடத்திற்கான மாதாந்திர தேர்வு எழுதுவதற்காக, ஹரிணியை, சாந்தி பள்ளிக்கு அழைத்து வந்தார்.
தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த ஹரிணியை, அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். அந்தியூர் போலீசார், ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.