ADDED : அக் 07, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், கோணமூலை, அண்ணாநகரை சேர்ந்த கட்டட தொழிலாளி குணசேகர். இவரின் மூத்த இளைய மகன் கிரிதீஷ், 12; ஏழாம் வகுப்பு படித்தார். வழக்கம்போல் பெற்றோர் நேற்று முன்தினம் காலை கூலி வேலைக்கு சென்று விட்டனர்.
தாய் மகேஷ்வரி மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தார். அப்போது வீட்டு விட்டத்தில் கொக்கியில் துாக்கில் கிரிதீஷ் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.