/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி
/
கிணற்றில் குளித்த பள்ளி மாணவன் பலி
ADDED : டிச 30, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தி: சத்தியமங்கலம் அருகே புதுவடவள்ளி, பட்டவர்த்தி, அய்யம்பா-ளையத்தை சேர்ந்த விவசாயி கனகராஜ் மகன் கிரண் குமார், 13; தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால், தோட்டத்து கிணற்றில் நண்ப-னுடன் குளித்தான்.
எதிர்பாராதவிதமாக கிணற்று மோட்டார் பெட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டை முறிந்து, கிரண்-குமாரின் தலையில் விழுந்து தண்ணீரில் மூழ்கினார். சத்தி தீய-ணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடியதில் கிரண்கு-மாரின் உடலை மீட்டனர். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

