ADDED : மே 26, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்,: தாளவாடி அருகே ஒசூரை சேர்ந்தவர் முருகேசன். மாற்றுத்திறனா-ளியான இவரின் மகள் ஹரிணி, 17; சூசைபுரம் அரசு உதவி பெறும் பள்ளி பிளஸ் ௧ மாணவி.
பள்ளி விடுமுறையால் பவானியிலுள்ள சித்தி வீட்டுக்கு சென்ற ஹரிணி, கடந்த, 22ம் தேதி தாளவாடி திரும்பினார். நேற்று முன்தினம் மதியம் மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் தொங்-கினார்.
தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்-பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இறந்து போன ஹரிணி, கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிகி-றது. தாளவாடி போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்-கொண்டுள்ளனர்.

