/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'காகிதம் வந்த பிறகே அறிவியல் வளர்ந்தது'
/
'காகிதம் வந்த பிறகே அறிவியல் வளர்ந்தது'
ADDED : ஆக 13, 2025 05:22 AM
ஈரோடு: ஈரோடு புத்தகத்திருவிழா நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நிறைவு நாள் மாலை நேர சிந்தனை அரங்கத்துக்கு, யூ.ஆர்.சி., பழனி-யம்மாள் மெட்ரிக் பள்ளி செயலர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் கந்தசாமி முன்னிலை வகித்தார். மக்கள்
சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின்
குணசேகரன் வரவேற்றார்.
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, மக்கள் சிந்தனை பேர-வையின், 25ம் ஆண்டு விழா மலரை வெளியிட்டு பேசியது: புத்-தகங்களை யார் ஒருவர் வாசித்து கொண்டே இருக்கிறார்களோ, அவர்கள் புத்தகமாகவே மாறுகிறார்கள். ஒப்பற்றவராகிறார். தேர்ந்தெடுத்த சிறந்த நுால்களை படித்து வந்தால், தானும் ஒரு நாளில் மாற்றவர்களால் படிக்கும் நுாலாக மாறுகிறார்.உலகில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு காகிதமாகும். ஓசையில் எண்-ணத்தை எழுதியது, காற்றில் கரைந்தது. காகிதத்தில் எழுதியதும் அடுத்த தலை
முறைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
காகிதத்தை கண்டுபிடித்த சீனாவை சேர்ந்த தசாய்லுான், அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த ஹூட்டன் பெர்க் என இருவரில் யார் சிறந்தவர் என்றால், இயந்திரம் இல்லாவிட்டாலும் காகி-தத்தில் நினைத்ததை எழுதிவிடலாம் என்பதால் தசாய்லுான் சிறந்-தவராகிறார். காகிதங்களின் வரவுக்கு பின் ஐரோப்பிய நாடுகள், 5 மடங்கு வளர்ச்சி பெற்றன. மேற்கத்திய நாடுகளில் எழுதுப-வர்கள் என்பவர்கள் தனியாக இருந்தார்கள். அவர்கள் அவ்வளவு உயர்ந்தவர்களாக காணப்பட்டனர். காகிதங்கள் வருவதற்கு முன் ஆரம்பத்தில் மதம் பற்றியதை மட்டும் எழுதினர். காகிதங்கள் வந்த பின், அறிவியல் வளர்ந்தது. மனிதனை பேராற்றல் மிக்கவ-னாக மொழி, எழுத்து, புத்தகம் என மாற்றியது. இவ்வாறு அவர் பேசினார். மக்கள் சிந்தனை பேரவை துணை தலைவர் விஜயராம-லிங்கம் நன்றி கூறினார்.