/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி
/
இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி
இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி
இரு ஏ.டி.எம்., மையங்களில் 2ம் முறையாக திருட்டு முயற்சி
ADDED : ஜன 13, 2026 07:06 AM

ஈரோடு: ஈரோட்டில் இ.வி.என்.சாலை மீன் மார்க்கெட் எதிரே, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. இங்கிருந்து சிறிது துாரத்தில் கர்நாடகா வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று அதிகாலை, 12:50 மணியளவில் கர்நாடகா வங்கி ஏ.டி.எம்., மையத்துக்கு இருவர் வந்தனர். கல்லால் மையத்தில் இருந்த மிஷினை உடைத்துள்ளனர்.
இதில் மிஷின் சேதமானாலும் பணத்தை எடுக்க முடிய-வில்லை. அங்கிருந்து சென்ற இருவரும், பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையத்துக்குள், 1:20 மணிக்கு புகுந்தனர். ஏ.டி.எம்., இயந்திர டிரேயை தொட்டவுடன் அலாரம் அடித்துள்ளது. இதனால் பயந்து போன இருவரும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி போலீசாருக்கு அதிகாலை, 4:30 மணிக்கு பின்னரே தகவல் தெரி-யவந்தது.
இது தொடர்பாக ஈரோடு டவுன், சூரம்பட்டி போலீசார் வழக்-குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த இரு ஏ.டி.எம்., மையங்களிலும் ஏற்கனவே திருட்டு முயற்சி நடந்துள்-ளது.
தற்போது இரண்டாவது முறையாக திருட்டு முயற்சி நடந்துள்-ளது. இரு ஏ.டி.எம்.,களிலும் இரவு காவலாளி இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

