ADDED : ஜன 09, 2026 05:00 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி நான்காவது நாளாக, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. ஈரோடு மாவட்ட மகளிரணி செய-லாளர் பங்கஜம் தலைமை வகித்தார். காலை, 10:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
