/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 22, 2026 04:34 AM
ஈரோடு:இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்று, 11வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்-பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து, 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. 2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடை-நிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்-றனர்.முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று, 11வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. பெருந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர் நந்தினி தலைமை வகித்தார். இதில் ஆசிரி-யர்கள் பலர் பங்கேற்றனர்.

