ADDED : ஜூலை 22, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் நகராட்சி அய்யாசாமி நகர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ், 53; திருப்பூரில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரின் மனைவி ராணி, 45; கருத்து வேறுபாட்டால் தனித்தனியே வசிக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் மகளை பார்க்க வீட்டுக்கு வந்த மனைவியை, நாகராஜ் கத்தியால் தாக்கினார். குடும்பத்தினர் ராணியை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். புகாரின்படி காங்கேயம் போலீசார் நாகராஜை கைது செய்தனர்.