ADDED : ஆக 25, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை; பவானி, மேட்டுநாசுவம்பாளையம், சுப்பிரம-ணிய வீதியை சேர்ந்த எட்வர்டு சர்ச்சில் மகன் ஸ்டாலின், 44; கருத்து வேறுபாட்டால் மனை-வியை பிரிந்து வாழ்ந்தார். மது குடிக்கும் பழக்கம் உண்டு. பெருந்துறை அருகில் தனியார் நிறுவ-னத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்தார்.
நண்பரின் பைக்கில் பெருந்துறை நோக்கி சென்றபோது, ஓலபாளையம் பிரிவு அருகில் நிலை தடுமாறி ரோட்டில் விழுந்து பலத்த காயம் அடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்-சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
