தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகரில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்

நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகரில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்

நீர்வரத்து அதிகரிப்பால் பவானிசாகரில் வண்டல் மண் அள்ளும் பணி நிறுத்தம்


ADDED : நவ 04, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 07:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் அணை நீர் தேக்க பகுதியில் இருந்து, விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துக்கொள்ள, விவசாயி களுக்கு அரசு அனுமதி வழங்கியது.

இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் முதல் வண்டல் மண் அள்ளும் பணி நடந்து வருகிறது.

இதில் அணை நீர்த்தேக்கத்தின் இக்கரையான வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான லாரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட அளவு மண் எடுக்கப்பட்டதால், இரண்டாம் கட்டமாக தெற்கு பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து மண் அள்ளி வந்தனர்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வண்டல் மண் அள்ளும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

'மழை குறைந்து நீர்வரத்து சரியும் பட்சத்தில் மீண்டும்

விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்படும்' என்று, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us