/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நோட்டாவுக்கு போடும் ஓட்டால் எந்த பயனுமில்லை இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு
/
நோட்டாவுக்கு போடும் ஓட்டால் எந்த பயனுமில்லை இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு
நோட்டாவுக்கு போடும் ஓட்டால் எந்த பயனுமில்லை இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு
நோட்டாவுக்கு போடும் ஓட்டால் எந்த பயனுமில்லை இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேச்சு
ADDED : பிப் 01, 2025 07:01 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, முனிசிபல் சத்திரத்தில் நேற்றிரவு நடந்த கூட்டத்தில், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:
தினம் தினம் தேர்தல் பிரசாரத்துக்கு போராடி, எதிர்ப்பை கடந்து அனுமதி பெற்று பேசுகிறோம். 'எங்களுக்கு ஓட்டுப்போ-டாவிட்டாலும் பரவாயில்லை; சீமானுக்கு போட்டு விடாதீர்கள்' என்றும், அவர் டெபாசிட் வாங்கிவிடக்கூடாது என்றும் தி.மு.க.,வினர் பயப்படுகின்றனர். அ.தி.மு.க., - பா.ஜ., என அத்-தனை கட்சியினரிடமும் அதையே கூறுகின்றனர். நோட்டாவுக்கு வேண்டுமானாலும் போட்டுவிடுங்கள். சீமானுக்கு போட்டு, போட்டியாளராக்கி விடாதீர்கள், என்கின்றனர். அந்த பயம் இருக்-கட்டும். நோட்டாவுக்கு போடுவதால் எந்த பயனும் இல்லை. நல்ல உணவு சமைத்து, நாமும் உண்ணாமல், மற்றவருக்கும் கொடுக்காமல் குப்பையில் போடுவதற்கு சமம்.
தமிழகத்தில், 2 கட்சியினரும் மாறி, மாறி ஆட்சி செய்தும், ஈரோட்டிலும் சரி, சென்னையிலும் சரி சாலை வசதி, சாக்கடை கழிவு வெளியேற வசதி என எந்த அடிப்படை கட்டமைப்பும் ஏற்படுத்தவில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அதற்காக பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகின்றனர். இவர்கள் எதற்கெடுத்-தாலும் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு, சாமி மறுப்பு பேசுகின்-றனர். ஆனால், கருணாநிதி சமாதியில் தினமும் பூப்போட்டு, முர-சொலி பேப்பரை வைத்து, டீ, வடை வாங்கி வைக்கின்றனர்.
இதுதான் திராவிட பகுத்தறிவா? கோவிலுக்கு செல்லாதே எனக்-கூறிவிட்டு, புதைகுழியில் கும்பிட செல்கிறார்கள்.
தனியார் பள்ளியில் தரமான கல்வி, தனியார் மருத்துவம-னையில் தரமான சிகிச்சை கிடைக்கிறது. இதை மாற்றி, தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க செய்வோம். முதல்வரும், கடைசி குடிமகனும் ஒரே இடத்தில் பயன் பெற செய்வோம். அதையே நாங்கள் முன்னேற்றம், மாற்றம் என்கிறோம். இவ்வாறு சீமான் பேசினார்.