/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமார் புல் சேகரித்து விற்பனை ரூ.19.17 லட்சம் வருமானம்
/
சீமார் புல் சேகரித்து விற்பனை ரூ.19.17 லட்சம் வருமானம்
சீமார் புல் சேகரித்து விற்பனை ரூ.19.17 லட்சம் வருமானம்
சீமார் புல் சேகரித்து விற்பனை ரூ.19.17 லட்சம் வருமானம்
ADDED : மார் 29, 2025 07:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளக்கரை, கொங்காடை பகுதி பழங்குடி-யின மக்கள், நடப்பு நிதியாண்டில், 42,610 கிலோ எடை கொண்ட சீமார் புல் சேகரித்து, 19.17 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்-ளனர். இதுபற்றி மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்திக்கு-றிப்பில் கூறியதாவது:
பழங்குடியின மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக, சமுதாய உரிமைகளாக சீமார்புல், புளி, கடுக்காய், நெல்லி, புங்கன், வேம்பு விதை, பூச்சக்காய் என சிறுவன மகசூல் சேகரம் செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் பலனாக ஈரோடு மாவட்டம் தாளக்கரை, கொங்காடை பழங்குடியின கிராம மக்கள், 2024-25 நிதியாண்டில் மட்டும், 42,610 கிலோ சீமார் புல் சேகரித்து விற்பனை செய்து, 19 லட்சத்து, 17,450 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.