/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளக்கோவிலில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
/
வெள்ளக்கோவிலில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
ADDED : பிப் 17, 2024 07:25 AM
காங்கேயம் : வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில், திருப்பூர் மாவட்ட பொது சுகாதார துறை அலுவலர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், கதிரவன், புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர் பிரவீன்குமார்.
உணவு பாதுகப்பு துறை அலுவலர் பாலமுருகன், மாவட்ட குழந்தைகள் உதவி மைய அலுவலர் ரதி பரத் ஆகியோர், வெள்ளகோவில் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கடைவீதிகளில், கடைகளில் சோதனை நடத்தினர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட், 4 கிலோ நெகிழிப்பை, 7,௦௦௦ ரூபாய் மதிப்பிலான காலாவதி உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். பொது இடங்கள், பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்போர், புகை பிடிப்பவர்ளுக்கு அபராதம் விதித்தனர்.