ADDED : பிப் 17, 2024 07:25 AM
தாராபுரம் : விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் தாராபுரத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலையை சேர்ந்தவர் தாமோதரன், 31; கடந்த, 2019 மார்ச் 11ல், கரூர், அக்கரைப்பாளையம் சாலையில் பைக்கில் சென்றார். அப்போது தாராபுரத்தில் இருந்து வெள்ளகோவில் சென்ற அரசு பஸ் பைக் மீது மோதியது.
இதில், காயமடைந்த தாமோதரன், நஷ்ட ஈடு கேட்டு, தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, 2023 பிப்., 13ல், தாமோதரனுக்கு, 92,000 நஷ்ட ஈடாக வழங்க தீர்ப்பளித்தார். இதன்படி வழங்காததால், வட்டியுடன் சேர்த்து, ௧.75 லட்சம் ரூபாய் செலுத்த உத்தரவிட்டார்.
அதையும் போக்குவரத்து கழகம் செலுத்தாத நிலையில், சார்பு நீதிபதி தர்மபிரபு உத்தரவின்படி, தாராபுரம் பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்சை, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.