ADDED : ஆக 28, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே புதுவள்ளியாம்பாளையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி
கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில், காபி சாகுபடி
குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது.
தொழில்நுட்ப அலுவலர்
(தோட்டக்கலை) பச்சியப்பன் வரவேற்றார். முதன்மை விஞ்ஞானி அழகேசன்
தலைமை வகித்து பேசினார். காபி வாரியம், நோயியல் துறையின் தலைவர் சவுந்திர
ராஜன் கலந்து கொண்டு, காபி சாகுபடிக்காக நாற்றாங்கால் தயாரிப்பு,
நிலம் தேர்வு, நடவு முறை, நீர் மற்றும் களை மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்
நிர்வாகம், அறுவடை தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்தார். காபி
சாகுபடி குறித்த கையேடு வெளியிடப்பட்டது. கோபி பாக்கு
உற்பத்தியாளர் சங்க செயலாளர் திருச்செல்வம் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
