/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மீன் வள திட்டம் குறித்த கருத்தரங்கு
/
மீன் வள திட்டம் குறித்த கருத்தரங்கு
ADDED : ஜூலை 11, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, உள்நாட்டு மீன் வள திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஈரோட்டில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்ட மக்கள் தன்னிறைவு அடையும் வகையில் மீன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ப, மீன் வளர்ப்போரிடம், மீன் வளத்துறை திட்டங்களை கொண்டு சேர்த்து பயன் பெற செய்ய வேண்டும், என்றார்.
மீன் வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயிலானி, மீன் வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதி போன்ற பல திட்டங்களை விளக்கினார். பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசினர். மீன் வள ஆய்வாளர் பத்மஜா நன்றி கூறினார்.