/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மஞ்சள் சாகுபடி குறித்து கோபியில் கருத்தரங்கம்
/
மஞ்சள் சாகுபடி குறித்து கோபியில் கருத்தரங்கம்
ADDED : டிச 18, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, டிச. 18-
இந்திய தொழிற் கூட்டமைப்பு சார்பில், மஞ்சள் சாகுபடி குறித்த கருத்தரங்கம் கோபியில் நேற்று நடந்தது.
சண்முகசுந்தரம் வரவேற்றார். கொடிவேரி அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி பேசினார். தொழிற்சாலை நிர்வாகி பினில் ஜார்ஜ் என்பவர், மஞ்சள் கொள்முதல் செய்வது, மஞ்சளின் தரம் மற்றும் பிற காரணிகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
நிலையான வேளாண் செயல்பாடுகளின் நிர்வாகி அசோக் பி நாயர் என்பவர், மஞ்சளின் நிலையான வேளாண் செயல்பாடுகள் குறித்து பேசினார். நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அரவிந்த் நன்றி கூறினார்.