/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விலை சரிவால் தேங்கிய பூக்கள் சென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
/
விலை சரிவால் தேங்கிய பூக்கள் சென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
விலை சரிவால் தேங்கிய பூக்கள் சென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
விலை சரிவால் தேங்கிய பூக்கள் சென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
ADDED : செப் 09, 2024 06:36 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில், 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மல்லி, முல்லை மற்றும் சம்பங்கி பூக்கள் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளையும் பூக்கள், புன்செய்புளியம்பட்டியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.ஆவணி மாத முகூர்த்தம், விநாயகர் சதுரத்தியை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகமாக இருந்ததால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மல்லிகை கிலோ, 940, முல்லை, 700, சம்பங்கி, 260 ரூபாயாக விலை உயர்ந்து விற்பனையானது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி, சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் முடிந்ததால், பூக்களின் தேவை குறைந்துள்ளது, இதனால் பூக்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் விலை பாதியாக குறைந்தது. மல்லிகை கிலோ, 940 ரூபாயில் இருந்து, 350, முல்லை, 700 ரூபாயில் இருந்து, 300 ஆகவும், சம்பங்கி கிலோ, 260 ரூபாயில் இருந்து, 100 ஆகவும் சரிந்தது. ஏலம் போகாமல் தேங்கியதால் மல்லிகை, முல்லை பூக்கள் குறைந்த விலையில் சென்ட் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.