/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
/
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
ADDED : அக் 02, 2024 01:39 AM
அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள்
உதவித்தொகை பெற அழைப்பு
ஈரோடு, அக். 2-
தமிழுக்கு தொண்டு செய்து, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, தமிழ் வளர்ச்சி துறை செயல்படுத்துகிறது.
முதுமையில் பொருள் வறுமை தாக்காதபடி மாதம், 3,500 ரூபாய், மருத்துவப்படி, 500 ரூபாய் என, 4,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. தமிழுக்காக வாழ்நாளை ஈர்த்து வரும் முதியவர்களுக்கு, அரசு பஸ்களில் இலவச பயணச்சலுகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை பெறும் தமிழறிஞர் மறைவுக்கு பின், அவரது மரபுரிமையருக்கும், அவரது வாழ்நாள் முழுவதும் மாதம், 2,500 ரூபாய், மருத்துவப்படி, 500 ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு, 1,334 தமிழறிஞர்கள் பயன் பெறுகின்றனர். நடப்பாண்டில் தகுதியான தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் வேறு திட்டங்கள் மூலம் உதவி தொகை பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க இயலாது.
தகுதியானவர்கள், தமிழ் வளர்ச்சி துறையின், www.tamilvalarchithurai.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும், 31க்குள் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும்.