/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாகனங்களுக்கு தீ வைப்பு; சத்தி அருகே பரபரப்பு
/
வாகனங்களுக்கு தீ வைப்பு; சத்தி அருகே பரபரப்பு
ADDED : மார் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள அக்கரை நெகமத்தை சேர்ந்தவர் சந்திரன்.
இவரது தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு பைக்குகள், நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் தகவலின்படி சென்ற சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். முன் விரோதம் அல்லது வேறு பிரச்னையால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

